‘500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது’ - அஸ்வினின் மனைவி பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின், அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்த சூழலில் 500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்து விட்டது என அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை அஸ்வின் படைத்திருந்தார். இருந்தும் அன்றைய நாளின் இரவே அணியில் இருந்து விலகி சென்னை திரும்பினார். குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட அவசர நிலை காரணமாக அஸ்வின் சென்றிருந்தார். தொடர்ந்து போட்டியின் 4-ம் நாளன்று சென்னையில் இருந்து ராஜ்கோட் வந்து அணியுடன் இணைந்து போட்டியில் பங்கேற்றிருந்தார்.

“ஹைதராபாத் போட்டியில் 500-வது விக்கெட்டை எதிர்நோக்கி இருந்தோம். அது நிறைவேறாத நிலையில் விசாகப்பட்டினம் போட்டியிலும் 500-வது விக்கெட் கிடைக்கவில்லை. அதனால் 499 விக்கெட்டை வீட்டில் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினோம். 500-வது விக்கெட் அப்படியே அமைதியாக கடந்து சென்றது. 500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது. எங்கள் வாழ்வின் நீண்ட நெடிய 48 மணி நேரம் அது.

ஆனால் இது 500 மற்றும் அதற்கு முன்பு வீழ்த்திய 499-வது விக்கெட் குறித்தது. இது அபார சாதனை. உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என அஸ்வினின் மனைவி ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட் வெற்றிக்கு பிறகு அந்த இக்கட்டான சூழலில் முடிவை எடுக்கும் ஆப்ஷனை அஸ்வின் வசமே கொடுத்தோம். அவர் குடும்பத்துடன் இருக்க விரும்பினார். அது தான் சரியானதும் கூட. அதே நேரத்தில் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் அணிக்கு திரும்பியது அவரது சிறந்த குணாதிசயத்தை வெளிக்காட்டுகிறது. அவர் அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். அஸ்வின், ராஜ்கோட்டில் இருந்து சென்னை வர தனி விமானத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்பாடு செய்ததாக போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வர்ணனையில் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்