ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய மகளிர் அணி சாதனை

By செய்திப்பிரிவு

ஷா ஆலம்: ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி அரை இறுதி சுற்றில் இரு முறை சாம்பியனான ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.

மலேசியாவின் ஷா ஆலம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிருக்கான அரை இறுதி சுற்றில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, அயா ஒஹோரியை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 13-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-17, 16-21, 22-20 என்ற செட் கணக்கில் நமி மட்சுயமா, ஷிஹாரு ஷிடா ஜோடியை வீழ்த்தியது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. இதன் பின்னர் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் நோசோமி ஒகுஹாராவை தோற்கடித்தார். இந்த வெற்றியால் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.

4-வதாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 14-21, 11-21 என்ற நேர் செட்டில் உலகத்தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ரெனா மயூரா, அயாகோ சகுராமோட்டோ ஜோடியிடம் வீழ்ந்தது. இதன் பின்னர் நடைபெற்ற கடைசி ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 17 வயதான இந்தியாவின் அன்மோல் ஹார்ப், உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள நட்சுகி நிடைராவுடன் மோதினார். இதில் தரவரிசையில் 472-வது இடம் வகிக்கும் அன்மோல் ஹார்ப் 21-14, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றியை வசப்படுத்த இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.

இறுதிப் போட்டியில் இந்திய அணியானது தாய்லாந்தை எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்