IND vs ENG | ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகல் - பிசிசிஐ

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் விலகியுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். அவரது சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். போட்டிக்கு பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் அஸ்வின் பங்கேற்று பேசி இருந்தார். அப்போது தான் சுழற்பந்து வீச்சாளர் ஆனது தற்செயலாக நடந்த விஷயம் என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகி உள்ளார்.

குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசர நிலை காரணமாக இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகி உள்ளார். இந்த சவாலான நேரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), இந்திய அணியும் அஸ்வினுக்கு பக்க பலமாக துணை நின்று முழு ஆதரவு அளிக்கும்” என எக்ஸ் தளத்தில் பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது.

‘அஸ்வினின் தாயார் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். அவர் ராஜ்கோட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இந்நேரத்தில் அவரது தாயாருடன் இருக்க சென்னை திரும்பியுள்ளார்’ என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்