பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன்: அகமதாபாத் - சென்னை இன்று மோதல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (15-ம் தேதி) தொடங்குகின்றன. வரும் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ், ஆகிய அணிகளுடன் டெல்லி டூபான்ஸ் அறிமுக அணியாக களமிறங்குகிறது.

9 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 5' சுற்றுக்கு முன்னேறும். ‘சூப்பர் 5' சுற்றில் மீண்டும் எல்லா அணிகளும், மற்ற அணிகளை தலா ஒரு முறை சந்திக்கும். இந்த சூப்பர் 5 சுற்று மார்ச் 11 முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சூப்பர் 5 சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இந்த ஆட்டம் மார்ச் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டியில் நுழையும். சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. லீக் சுற்றில் 36 ஆட்டங்களும், சூப்பர் 5 சுற்றில் 10 ஆட்டங்களும் பிளே ஆஃப் சுற்றில் ஒரு ஆட்டம், இறுதிப் போட்டி என ஒட்டுமொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.40 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பிடிக்கும்அணி ரூ.30 லட்சத்தை பெறும். கூடுதலாக தொடரின் மதிப்பு மிக்க வீரர், சிறந்த ஸ்பைக்கர், சிறந்த பிளாக்கர் உள்ளிட்ட பல்வறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதை பெறுபவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட உள்ளது.

தொடக்க நாளான இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அகமதாபாத் டிபன்டர்ஸ், சென்னை பிளிட்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்களூரு டார்படோஸ் - கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை பிளிட்ஸ் அணி முதல் இரு சீசன்களிலும் லீக் சுற்றைகடக்கவில்லை. இம்முறை சென்னை பிளிட்ஸ் அணி அகின்ஜி.எஸ். தலைமையிலும், அகமதாபாத் அணி முத்துசாமி அப்பாவு தலைமையிலும் களமிறங்குகிறது. சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதால் சென்னை பிளிட்ஸ் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

மேலும் நடப்பு சாம்பியனான அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த தட்சிணாமூர்த்தி இம்முறை சென்னை பிளிட்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இதனால் சென்னை பிளிட்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரைம் வாலிபால் லீக் தொடரின் போட்டிகளை சோனி ஸ்போா்ட்ஸ் குழும சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. பிரைம் வாலிபால் லீக் போட்டிகளை நேரில் காண புக்மைஷோ இணையதளம் வாயிலாக டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.250 எனவும், அதிகபட்ச விலை ரூ.499 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்