மும்பை: உருவக்கேலி செய்த வலைதளவாசிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் பதிலளித்த விதம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மொத்தம் 165 சர்வதேச போட்டிகளில் பும்ரா விளையாடி உள்ளார். மொத்தமாக 323 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அண்மையில் காயத்தில் இருந்து மீண்ட அவர், இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். 29 வயதான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கடந்த 2021-ல் தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே, காதலர் தினம் வருவதை முன்னிட்டு விளம்பர வீடியோ ஒன்றை பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். குழந்தை பெற்ற பின் சஞ்சனா பொதுவெளியில் வெளியிடும் பதிவு இதுவாகும். குழந்தை பெற்றதால் விளம்பர வீடியோவில் சற்று எடைகூடி இருந்தார் சஞ்சனா. இதனை குறிப்பிட்டு வலைதளவாசி ஒருவர் சஞ்சனாவை உருவக்கேலி செய்திருந்தார்.
அந்த நபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்தப் பதிவுக்கு கீழ், "உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் பாடப்புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் பெண்களின் உடல் வடிவம் பற்றி இங்கு பேசுகிறாய். அமைதியாக இங்கிருந்து சென்றுவிடு" என்று காட்டமாக பதில் அளித்திருந்தார் சஞ்சனா. அவரின் இந்தப் பதிலடி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
» ராஜ்கோட் டெஸ்ட் | அக்சர் படேல் vs குல்தீப் யாதவ் - செலக்ஷனில் யாருக்கு அதிக வாய்ப்பு?
» ஜூன் மாதத்துக்குப் பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம்: தமிழக அரசு தகவல் @ சென்னை உயர் நீதிமன்றம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago