நாட்டுக்காக விளையாடுவதுதான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கும்: ஆகாஷ் தீப் உற்சாகம்

By செய்திப்பிரிவு

மும்பை: நாட்டுக்காக விளையாடுவதுதான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிஹாரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது பெங்கால் அணிக்காகவும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடி வருகிறார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் திறமையை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் தற்போது ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆகாஷ் தீப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அதே நேரத்தில் அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டதில் எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. கடந்த பல சீசன்களாக நான் சிறப்பாக செயல்பட்டிருந்தேன். அதனால் தேர்வுக் குழுவினரின் பார்வை என் மீது விழுந்திருக்கும் என்று நினைத்தேன். அதன்படி நான் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக, இந்திய ஏ அணியில் இடம்பிடித்து நான்விளையாடியபோது சிறப்பாக பந்துவீசியிருந்தேன். தற்போது தேசிய அணிக்காக விளையாடுவது மிகவும் சிறப்பான தருணமாக இருக்கும். நாட்டுக்காக விளையாடுவதுதான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகஇருக்கும். அந்த கனவு தற்போது நிஜமாகவே நனவாகப் போவதில் எனக்கு மிகுந்தமகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்துஎன்னைத் தேர்வு செய்தத் தேர்வுக் குழுவினருக்கு நன்றி. அவர்களது நம்பிக்கையைநான் காப்பாற்றுவேன். இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி விக்கெட்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெங்கால் அணிக்காக கடந்த சில சீசன்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகஇந்தியா ஏ அணிக்காக நான் சிறப்பாகபந்து வீசினேன். அப்போதே எனக்குஇந்திய அணியிலிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். அதனால் இந்தியஅணிக்குத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டபோது அது ஆச்சரியமாக இருக்கவில்லை.

நீங்கள் சிறப்பாக விளையாடி முன்னேற வேண்டும். மேலும் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான திறமையைவெளிப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உங்களுக்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் எனக்கு உதவிய அனைத்து மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களுக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டவனாக இருப்பேன். இவ்வாறு ஆகாஷ் தீப் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்