சென்னை: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், 35-வது அனைத்து இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டி பிப்ரவரி12-ம் தேதி (இன்று) தொடங்கிவரும் 16-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 35-வது ஹாக்கி போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் பிப்ரவரி 12-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. தொடக்க விழாவில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ஹாக்கி ஒலிம்பிக் வீரர் ஆடம் ஆண்டனி சின்கிளேர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இப்போட்டியில், இந்தியாவில் உள்ள பல்வேறு அஞ்சல் வட்டங்களை சேர்ந்த 80 விளையாட்டு வீரர்கள் அடங்கிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே 10 லீக் ஆட்டங்கள் நடைபெறும். இறுதி போட்டி வரும் 16- ம் தேதி நடைபெறவுள்ளது. மாலை நடைபெறும் நிறைவு விழாவில் டெல்லியில் உள்ள இந்திய அஞ்சல்துறையின் இயக்குனர் ஜெனரல் ஸ்மிதா குமார், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரியாஸ் நபி முகம்மது ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago