புவனேஷ்வர்: சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் புரோ ஹாக்கி லீக் தொடரில் நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. 7-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார்.
தொடர்ந்து 20-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்கை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி அசத்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 24-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜுக்ராஜ் சிங் கோலாக மாற்ற முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என வலுவான முன்னிலையில் இருந்தது.
34-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை அடித்தது. அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்கில் கேப்டன் மிரல்ஸ் மார்க் கோல் அடித்தார்.
50-வது நிமிடத்தில் இந்திய அணியின் லலித் குமார் உபாத்யாயா பீல்டு கோல் அடித்து அசத்தினார். முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியஅணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று நெதர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago