வெய்சன்ஹாஸ் செஸ் போட்டி: கார்ல்சன், டிங் லிரெனை வீழ்த்தினார் குகேஷ்

By செய்திப்பிரிவு

வாங்கல்ஸ்: ஜெர்மனியின் வாங்கல்ஸ் நகரில் வெய்சன்ஹாஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் உலகின்முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அர்மேனியாவின் லெவோன் அரோனியன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென் ஆகியோரை தோற்கடித்தார். அதேவேளையில் பிரான்சின் அலிரெசா ஃபிரோசாவிடம் தோல்வி அடைந்தார்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் டி.குகேஷ் 3 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் 3 வெற்றி, ஒரு டிராவுடன் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம்செலுத்துகிறார். உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டரோவ் 2 வெற்றி, 2 டிராவுடன் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.

மேக்னஸ் கார்ல்சன், அலிரெசா ஃபிரோசா, ஃபேபியானோ கருனாஆகியார் தலா 3 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். டிங் லிரென் 4 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து 8 பேர் கலந்துகொண்டுள்ள தொடரில் புள்ளிகள் ஏதும் இன்றி கடைசி இடத்தில் உள்ளார். லெவோன் அரோனியன் 3 தோல்வி, ஒரு டிராவுடன் 0.5 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்