கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இமாலய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி, வெற்றிக்காக கடுமையாக போராடி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் 6-வது விக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் மற்றும் முகமது நபி இணைந்து அபாரக் கூட்டணி அமைத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா, 139 பந்துகளில் 210 ரன்கள் எடுத்தார். ஃபெர்ணான்டோ 88 ரன்கள் எடுத்திருந்தார்.
382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் அணி விரட்டியது. இருந்தும் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 55 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது ஆப்கானிஸ்தான். அந்த இக்கட்டான சூழலில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் மற்றும் முகமது நபி இணைந்து வலுவான கூட்டணி அமைத்தனர். இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தனர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் 6-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
நபி, 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸ்மத்துல்லா ஓமர்சாய், 115 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago