முதுகுத் தசைப்பிடிப்பு மற்றும் இடுப்புப் பகுதியில் கடும் வலி காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வலைப்பயிற்சியில் ஃபார்வர்ட் டிபன்ஸ் ஆடும்போதெல்லாம் அவருக்கு முதுகில் தசைப்பிடிப்பும், இடுப்பில் வலியும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. மற்ற வீரர்களின் கிட் பேக் விசாகப்பட்டிணத்திலிருந்து ராஜ் கோட் வந்து சேர்ந்ததாகவும் ஸ்ரேயாஸ் அய்யரின் கிட் பேக் மும்பைக்கு அனுப்பப்பட்டதாகவும் இதனால் அவர் இந்தத் தொடரில் ஆட முடியாது போயுள்ளது என்றும் முன்னணி ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறார். கடந்த ஆண்டு முதுகு காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ஸ்ரேயாஸ் அய்யர். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகே இந்தப் பிரச்சனை அவருக்கு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து அவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து அவர் டெஸ்ட் போட்டித் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஐபிஎல் இருக்கிறதே, அதற்குள் உடலை ஃபிட் ஆகத் தயார் படுத்த வேண்டிய நிர்பந்தமும் அவருக்கு உள்ளது. ஏற்கெனவே விராட் கோலி இந்த தொடர் முழுதுமே ஆடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ள நிலையில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். ஆனால் கடந்த போட்டியில் காயம் காரணமாக ஆட முடியாமல் போன கே.எல்.ராகுல், ஜடேஜா ராஜ்கோட் டெஸ்ட்டிற்குத் திரும்புவதால் கவலையில்லை என்றே தெரிகிறது.
» U19 WC | பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை!
» பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம்: ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் அய்யர் அவ்வளவு திட்டவட்டமாக பேட் செய்யவில்லை என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அவரிடம் நின்று ஆடி சதம் எடுக்க வேண்டும் என்ற வேட்கை இல்லை என்கிறார் கெவின் பீட்டர்சன்.
விசாகப்பட்டிணத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் பேட் செய்தபோது இங்கிலாந்தின் இடது கை அறிமுக வீரர் ஹார்ட்லியை எதிர்கொள்ளும் போது தேவையில்லாமல் லெக் ஸ்டம்பிற்கு வெளியே சற்றே ஒதுங்கி ஆடினார். இது தேவையில்லாதது என்று கெவின் பீட்டர்சன் கருதுகிறார். பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சலீம் மாலிக், ஸ்பின்னர்களுக்கு எதிராக லெக் ஸ்டம்பில் ஒதுங்கிக் கொண்டு ஆப் திசையில் ட்ரைவ், கட்களை திறம்பட ஆடுவார். ஆனால் அய்யரிடம் அந்த ஷாட்களும் பஞ்சமாக உள்ளன.
ஜேம்ஸ் ஆண்டர்சன் வயதான இந்தக் காலத்தில் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளைக் கூட லெக் ஸ்டம்புக்கு வெளியே ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் அடிக்கப் பார்க்கிறார் ஸ்ரேயாஸ் அய்யர். புல் ஷாட் ஆட மறுக்கிறார். ஹூக் ஷாட் ஆடுவதையும் தவிர்க்கிறார். ஒரு விதத்தில் அவர் இந்தத் தொடரிலிருந்து விலகியது மறைமுக ஆசீர்வாதமே. யாருக்கு அவருக்கும், அவரிடத்தில் ஆடப்போகும் புது வீரருக்கும்தான்!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago