மவுன்ட் மவுங்கனுயி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரச்சின்ரவீந்திரா 240 ரன்கள் விளாசினார்.
மவுன்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் நாள்ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 112, ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணியானது 144 ஓவர்களில் 511 ரன்கள் குவித்து ஆட்மிழந்தது.
கேன் வில்லியம்சன் 289 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்த நிலையில் ருவான் டி ஸ்வார்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி இரட்டை சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா 366 பந்துகளில், 26 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 240 ரன்கள் குவித்த நிலையில் நெய்ல் பிராண்ட் பந்தில் போல்டானார். டேரில் மிட்செல் 34, டாம் பிளண்டல் 11, கிளென் பிலிப்ஸ் 39, மிட்செல் சாண்ட்னர் 2, மேட் ஹென்றி27, டிம் சவுதி 0 ரன்களில் வெளியேறினர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நெய்ல் பிராண்ட் 6, ருவான் டி ஸ்வார்ட் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 28 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. மூன்றம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் 162 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்கா. அதன் மூலம் 349 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது நியூஸிலாந்து. இரண்டாவது இன்னிங்ஸில் 24 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பு 78 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்த நிலையில் பேட் செய்து வருகிறார். முதல் இன்னிங்ஸில் அவர் சதம் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago