அறிமுகமான ஓராண்டிலேயே இரட்டை சதம் - ஜெய்ஸ்வாலுக்கு பார்த்திவ் பட்டேல் புகழாரம்

By செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஓராண்டிலேயே இரட்டை சதம் விளாசி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல்புகழாரம் சூட்டியுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் இந்தியா, இங்கிலாந்து மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் யஷஸ்விஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடிசதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளாசும் 2-வது சதமாகும்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடிக்க 10 வருடங்கள் எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் அறிமுகமான ஓராண்டிலேயே இரட்டைச் சதத்தையஷஸ்வி ஜெய்ஸ்வால் விளாசியுள்ளதாகவும் முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் பட்டேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்த்திவ் பட்டேல் கூறியதாவது: யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகச்சிறந்த ஆட்டக்காரராக மாறி வருகிறார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது வித்தியாசமான விளையாட்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ள அவர் தற்போது இரட்டை சதமும் விளாசி சாதனை புரிந்துள்ளார். பொதுவாக அனைத்து வீரர்களாலும் இரட்டை சதத்தை அடிக்கடி எடுக்க முடியாது.

ஜாம்பவான் சச்சின் பாஜி கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்க 10 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன ஓராண்டிலேலேயே இரட்டை சதம் அடித்துள்ளார். இவ்வாறு பார்த்திவ் பட்டேல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்