AUS vs WI முதல் ஒருநாள் போட்டி | மே.இ.தீவுகளை வீழ்த்தியது ஆஸி.

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 48.4 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கீசி கார்ட்டி 108 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 88 ரன்களும் ராஸ்டன் சேஸ் 67 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்களையும் சீன் அபோட், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

232 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேமரூன் கிரீன் 104 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 77 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 79 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ஜோஷ் இங்கிலிஷ் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 65ரன்களும், டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 1-0 என என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்