பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான கிடாம்பி காந்த் தோல்வி அடைந்தார்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முன்னாள் முதல் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த், சகநாட்டைச் சேர்ந்த மிதுன் மஞ்சுநாத்துடன் மோதினார். இதில் 63-ம் நிலை வீரரான மிதுன் மஞ்சுநாத் 21-9, 13-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிசுற்றுக்கு முன்னேறினார். இந்தஆட்டம் 54 நிமிடங்கள் நடைபெற்றது. கால் இறுதி சுற்றில் மஞ்சுநாத், நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவுடன் மோதுகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீன தைபேவின் யு போ பையுடன் மோதினார். இதில்அஷ்மிதா சாலிஹா 21-12,15-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் நுழைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா,காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 24-22 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த தனிஷாகிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago