மும்பை: கிரிக்கெட் களத்தில் ‘சச்சின்.. சச்சின்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய நாட்களில் முழக்கமிட்டு தங்களது ஆதரவை அவருக்கு தெரிவிப்பார்கள். இப்படி இருக்கும் நிலையில் சாலை பயணத்தில் தனது ரசிகர் ஒருவரை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சச்சின்.
அவருக்கென கோடான கோடி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். கடந்த காலங்களில் தனது அன்பான ரசிகர்களை சச்சின் சந்தித்த தருணங்களும் உண்டு. அவை அனைத்தையும் தகர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது. சாலை பயணத்தின் போது ரசிகருடன் குஷியாக பேசி உள்ளார். அந்த வீடியோவை அவரே சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் உள்ளார். ‘ஐ மிஸ் யூ’ என சச்சின் பெயர் பதித்த டி-ஷர்ட் ஒன்றை அணிந்தபடி சாலையில் பைக் வட்டி சென்ற ரசிகரை தான் சச்சின் சந்தித்துள்ளார்.
“சச்சின், டெண்டுல்கரை சந்தித்த தருணம். என் மீது இந்த அளவுக்கு அன்பு காட்டுவதை பார்க்கும்போது என் இதயம் மகிழ்ச்சியால் நிறைகிறது. எதிர்பார்க்காத இடத்திலிருந்து வரும் மக்களின் அன்புதான் வாழ்க்கையை சிறப்பானதாக்குகிறது” என சச்சின், ட்வீட் செய்துள்ளார்.
ஹரிஷ் குமார் எனும் ரசிகரை தான் சச்சின் சந்தித்துள்ளார். பயணத்தின் போது தனது பெயர் கொண்ட டி-ஷர்டை ஹரிஷ் அணிந்திருப்பதை சச்சின் கவனித்துள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்று, தனது காரை நிறுத்தி, அவரிடம் இயல்பாக பேச்சு கொடுத்துள்ளார். தான், பேசுவது சச்சின் உடன் என தெரிந்ததும் அவர் செய்வதறியாது தவித்துள்ளார்.
பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசி உள்ளனர். அப்போது சச்சின் மீது தான் வைத்துள்ள அன்பை அவர் வெளிப்படுத்தினார். செய்தித்தாள்களில் வெளியான சச்சின் படங்களை, வெட்டி, நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைத்து இருப்பதையும் ஹரிஷ் காண்பித்தார். பின்னர் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டு இருவரும் விடை பெற்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
\
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago