9 அணிகள் கலந்து கொள்ளும் பிரைம் வாலிபால் லீக் பிப்.15-ல் சென்னையில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும்பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 15-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ், ஆகிய அணிகளுடன் டெல்லி டூபான்ஸ் அறிமுக அணியாக களமிறங்குகிறது.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்5' சுற்றுக்கு முன்னேறும். ‘சூப்பர் 5' சுற்றில் மீண்டும் எல்லா அணிகளும், மற்ற அணிகளை தலா ஒரு முறை சந்திக்கும். இந்த சூப்பர் 5 சுற்று மார்ச் 11 முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும்அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இந்த ஆட்டம் மார்ச் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டியில் நுழையும். சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்