ஹைதராபாத்: விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாட முயற்சி செய்யவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்தார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. வெற்றிக்கு அருகில் இருந்தும் இந்திய அணி அந்த வாய்ப்பை நழுவவிட்டதை கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஷுப்மன் கில்லுக்கு அதிக அளவு வாய்ப்புகள் கொடுத்தும் அதை அவர் சரிவர பயன்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் போட்டி குறித்து அனில் கும்ப்ளே கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான முதல்டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தனர். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில், கடந்த சில போட்டிகளில் மோசமாகவே விளையாடி வருகிறார்.
அடுத்தடுத்து வரும் போட்டிகளில் ஷுப்மன் கில் நிச்சயம் ரன்கள் சேர்க்க வேண்டும். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள அவர் பிரத்யேக திட்டத்துடன் வர வேண்டும்.
» 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களைக் குவிக்க வேண்டும். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள ஷுப்மன் கில், கட்டுப்பாட்டுடன் விளையாட வேண்டும். இந்த விஷயத்தில்தான் ஷுப்மன் கில் அதிக பயிற்சி செய்ய வேண்டும்.
அதை வெறும் 4 நாட்களில் செய்துவிட முடியாது. அதனால் அவரது மனநிலையில் மாற்றத்தை கொண்டு வர தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட், ஷுப்மன் கில்லிடம் பேச வேண்டும்.
ஷுப்மன் கில் நீண்ட நாட்களாக சேதேஷ்வர் புஜாரா இடத்தில் (3-வது இடம்) விளையாடி வருகிறார். 100 டெஸ்ட்போட்டிகளுக்கும் மேலாக விளையாடிய சேதேஷ்வர் புஜாராவுக்கு கூட இந்திய அணியில் இவ்வளவு சலுகைகள் அளிக்கப்படவில்லை.
ஆனால், ஷுப்மன் கில்லுக்கு அனைத்து வகையிலும் இந்திய அணி நிர்வாகத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்திய ஆடுகளங்களில் 3-வதுஇடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றால், திறமை மட்டும்போதாது. அதற்கான ஆட்ட நுணுக்கங்களையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இளம் வீரரான ஷுப்மன் கில் கற்றுகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் தன்னை பேட்டிங்கில் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீதான அழுத்தம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago