கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு: 127 பதக்கங்களுடன் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் மகாராஷ்டிரா

By செய்திப்பிரிவு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் 11-வது நாளின் முடிவில் மகாராஷ்டிரா 44 தங்கம் உட்பட 127 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதன்11-வது நாளான நேற்று மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் பதக்கங்களை வென்றனர்.

நீச்சலில் மகளிருக்கான 400 மீட்டர் மெட்லியில் கர்நாடகாவின் தன்யா ஷடாக்சரி தங்கப்பதக்கம் வென்றார். தமிழகத்தின் ஸ்ரீநிதி நடேசன் வெள்ளிப் பதக்கமும், மகாராஷ்டிராவின் ராஹ்வி ராமானுஜன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். ஆடவருக்கான 50 மீட்டர் பேக் ஸ்டிரோக்பிரிவில் தமிழகத்தின் நித்திக் நாதெல்லா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மகாராஷ்டிராவின் ரிஷப் அனுபம் தாஸ் தங்கப் பதக்கமும், கர்நாடகாவின் ஆகாஷ் மணி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான 50 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் தமிழகத்தின் தீக்சா சிவகுமார் வெண்கலப் பதக்கம் வென்றார். மகராஷ்டிராவின் பிரசாத் ரஜதன்யா தங்கப் பதக்கமும், கர்நாடகாவின் ஆருஷி அகர்வால் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஆடவருக்கான 4x100 மீட்டர் ப்ரீஸ்டைல் தொடர் நீச்சலில் நித்திக் நாதெல்லா, நித்திஷ், கவின் ராஜ், சங்கிவ் பிரணவ் ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. மகாராஷ்டிரா தங்கப் பதக்கமும், கர்நாடகா வெள்ளிப் பதக்கமும் வென்றன.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் 11-வது நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் மகாராஷ்ரா 44 தங்கம், 39 வெள்ளி, 44 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 127 பதக்கங்களை குவித்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஹரியாணா 33 தங்கம், 19 வெள்ளி, 42 வெண்கலம் என 94 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகம் 29 தங்கம், 19 வெள்ளி, 42 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் 3-வது இடம் வகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்