கே.எல்.ராகுல், ஜடேஜா அரை சதம் விளாசல்: இந்திய அணி 421 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 421 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70, ஜானி பேர்ஸ்டோ 37, பென் டக்கட் 35 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. ரோஹித் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76, ஷுப்மன் கில் 14 ரன்கள் சேர்த்துஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுத்தநிலையில் ஜோ ரூட் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷுப்மன் கில் 23 ரன்களில்டாம் ஹார்ட்லி பந்தில் நடையைகட்டினார். இதையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி இன்னிங்ஸை கட்டமைக்க முயற்சித்தது. ஸ்ரேயஸ்ஐயர் 63 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரெஹான்அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜாகளமிறங்கினார். ரெஹான் அகமது வீசிய 57-வது ஓவரில் கே.எல்.ராகுல் 2 சிக்ஸர்களை பறக்கவிட இந்திய அணி 246 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.

கே.எல்.ராகுல் 86 ரன்கள் எடுத்த நிலையில் டாம் ஹார்ட்லி பந்தில்ஆட்டமிழந்தார். அதிரடியாகவிளையாடிய ஜடேஜா 84 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 20-வது அரை சதத்தை கடந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடி கர்பரத் 81 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 110 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 155 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 81 ரன்களும் அக்சர் படேல் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்