கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு: பதக்க பட்டியலில் தமிழக அணி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: கோவையில் நேற்று நடைபெற்ற கோலோ இந்தியா கூடைப்பந்து விளையாட்டில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் தமிழக அணி 70 - 66 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழ்நாடு 86 - 85 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் தமிழகத்தின் மெல்வினா ஏஞ்சலின் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 50மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் தமிழகத்தின் ஹித்தேஷ் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

தடகளத்தில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் அலிஸ் தேவ பிரசன்னா 1.66 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும், மற்றொரு தமிழக வீராங்கனையான பிருந்தா 1.63 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மகளிருக்கான 200 மீட்டர்ஓட்டத்தில் தமிழகத்தின் அபினயாபந்தய தூரத்தை 24.85 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் கோகுல் பாண்டியன் பந்தய தூரத்தை 21.90 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான 1000 மீட்டர் மெட்லி ரிலே பிரிவில் தேசிகா, அக்சிலின், அபினயா, அன்சிலின் ஆகியோரை உள்ளடக்கிய தமிழகஅணி 2:13.96 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றது. கர்நாடகா வெள்ளிப்பதக்கமும், மகாராஷ்டிரா வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின.

ஆடவருக்கான 1000 மீட்டர் ரிலே பிரிவில் அன்டன் சஞ்ஜய், நித்ய பிரகாஷ், கோகுல் பாண்டியன், சரண் ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணி பந்தய தூரத்தை 1:55.49 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் ரவி பிரகாஷ் (14.76 மீ) தங்கப் பதக்கமும், யுவராஜ் (14.34) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

வாலிபால் போட்டியில் மகளிர் பிரிவில் தமிழக அணி 26-24, 25-13, 25-13 என்ற செட் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. தமிழ்நாடு மகளிர் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. ஆடவருக்கான வாலிபாலில் தமிழக அணி 24, 22-25, 25-18, 25-16 என்ற செட் கணக்கில் ஜம்மு & காஷ்மீர் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் தமிழ்நாடு ஆடவர் அணி 5 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்பை பலப்படுத்திக் கொண்டது.

போட்டியின் 7-வது நாளான நேற்று தமிழகம் 23 தங்கம், 12 வெள்ளி, 23 வெண்கலத்துடன் மொத்தம் 58 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. மகாராஷ்டிரா 26 தங்கம், 23 வெள்ளி, -29 வெண்கலம் என 78 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹரியானா 21 தங்கம். 12 வெள்ளி, 29 வெண்கலத்துடன் 62 பதக்கங்கள் பெற்று 3-வது இடத்தில் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்