சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, கோவை, மதுரை , திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளானநேற்று ஸ்குவாஷில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் சந்தேஷ், அரிஹந்த், மெய்யப்பன் ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணிதங்கப் பதக்கம் வென்றது. இதேபோன்று மகளிருக்கான அணிகள் பிரிவில் ஷமீனா ரியாஸ், பூஜா ஆர்த்தி, தீபிகா ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணி தங்கப் பதக்கம் வென்றது.
தடகளத்தில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் அன்சிலின் பந்தய தூரத்தை 2:11.36 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம்வென்றது. மற்றொரு தமிழக வீராங்கனையான அக்சிலின் பந்தய தூரத்தை 2:11.54 விநாடிகளில் அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இவர்கள் இருவரும் சகோதரிகள் ஆவர். கர்நாடகாவின் பிரியங்கா ஒலக் (2:12.12) வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் பவீனா ராஜேஷ் 12.10 மீட்டர் தூரம் தாண்டிதங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான பமிலா வர்ஷினி 11.84 மீட்டர் தூரம்தாண்டி வெள்ளி வென்றார்.
மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் மகாராஷ்டிராவின் சியா சவாந்த் பந்தய தூரத்தை 12.10 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தின் அபினயா பந்தய தூரத்தை 12.21 விநாடிகளில் அடைந்து வெள்ளிப் பதக்கம்கைப்பற்றினார். வாள்வீச்சில் ஆடவருக்கான சேபர் அணிகள் பிரிவில்அக்சத், அர்லின், மவுரிஷ், ஷார்ஜின் ஆகியோர் அடங்கிய தமிழக அணி வெண்கலம் வென்றது.
ஆடவருக்கான குத்துச்சண்டையில் 51-54 கிலோ எடைப் பிரிவில்தமிழக வீரர் நவீன்குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். 67-71 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் கபிலன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான குத்துச்சண்டையில் 57-60 கிலோ எடைப் பிரிவில் தமிழக வீராங்கனை ஜீவா வெண்கலப் பதக்கம் வென்றார். 63-66 கிலோ எடைப் பிரிவில் தமிழக வீராங்கனை துர்கா வெண்கலப் பதக்கம் பெற்றார்.
தடகளத்தில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் தருண் விகாஷ் 2.01 மீட்டர் உயரம்தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் அபினயா பந்தய தூரத்தை 12.21 விநாடிகளில் கடந்துவெள்ளி வென்றார். ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர்கோகுல் பாண்டியன் பந்தய தூரத்தை 10.89 விநாடிகளில் கடந்துவெள்ளிப் பதக்கம் வென்றார்.
6-வது நாள் போட்டியின் முடிவில் தமிழகம் பதக்கப் பட்டியலில் 16 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் என 44 பதக்கங்கள் பெற்று 3-வது இடத்தில் இருந்தது. மகாராஷ்டிரா 21 தங்கம், 18 வெள்ளி,25 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஹரியானா 18 தங்கம், 10 வெள்ளி, 27 வெண்கலம் என 55 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago