கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - சாதிக்க காத்திருக்கும் தமிழக மகளிர் வாலிபால் அணி

By செய்திப்பிரிவு

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் வாலிபால் போட்டி 24-ம்தேதி (இன்று) முதல் 28-ம் தேதி வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 5 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியிலும் தமிழ்நாடு வாலிபால் மகளிர் அணி சிறந்த திறனை வெளிப்படுத்தி வந்துள்ளது.

ஒரு தங்கம், வெள்ளி பதக்கம் வென்றுள்ள தமிழ்நாடு அணி இரு முறை 4-வது இடம் பிடித்திருந்தது. ஒரே ஒரு முறை மட்டும் 6-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்திருந்தது. இம்முறை சொந்த மண் சாதகத்துடன் தங்கப் பதக்கம் வெல்வதில் தமிழ்நாடு வாலிபால் வீராங்கனைகள் அதீத முனைப்புடன் உள்ளனர். சிறப்பு பயிற்சி மேலாளரான 38 வருட அனுபவம் கொண்ட பி.செந்தூர் பாண்டியன் தமிழ்நாடு வீராங்கனைகளின் திறனை பட்டை தீட்டி வருகிறார். ஒவ்வொரு சர்வீஸிலும், அட்டாக்கிலும், பிளாக்கிலும், டிபன்ஸிலும் வீராங்கனைகள் மேற்கொள்ளும் தவறுகளை சுட்டிக் காட்டி அவர்களை, கூர்தீட்டி வருகிறார்.

அணியில் உள்ள 14 வீராங்கனைகளில் 8 பேர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியை சேர்ந்தவர்கள். இவர்களில் அணியில் துடிப்புடன் செயல்படும் ஆனந்தி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் 4 முறை பங்கேற்று 2 பதக்கங்களை வென்றுள்ளார். இம்முறை சொந்த மண்ணில் தங்கப் பதக்கத்தை கைகளில் ஏந்தும் தருணத்துக்காக காத்திருக்கிறார்.

ஆனந்தி கூறும்போது, “பல்வேறு வயது பிரிவுகளில் 14 தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். 2022-ம்ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கடற்கரை வாலிபால் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளேன்.

நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். அப்பா அரசு, அம்மா மீனாட்சி ஆகியோர் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். தற்போது கல்லூரியில் 2-வது வருடம் படிக்கிறேன். 4-வது முறையாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் விளையாட உள்ளேன்.

தாத்தா, மாமா வாலிபால் வீரர்கள். அந்த ஆர்வத்தில் விளையாட்டுக்குள் வந்தேன். அணியில் எனது ரோல், யுனிவர்சல். 4 முறை கேலோ இந்தியா விளையாட்டில் பங்கேற்றுள்ளேன். இதில் ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன். இம்முறை சொந்த மண்ணில் தங்கப் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான வாலிபால் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு அணி விவரம்:

பி.கார்த்திகா, சி.சிவப்பிரியா, எம்.காவியா, ஜி.ஏ.சுவாதிகா, வி.அபினயா, ஆர்.ஜீவிகா, கே.தானியா, ஜி.பிரதீபா, எஸ்.அட்சயா, ஏ.விஷ்ணு ஸ்ரீ, எம்.நிதிஷா, ஏ.ஆனந்தி, கே.துர்கா தேவி, ஏ.ஷாலினி பிரியா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்