மும்பை: வரும் பிப்ரவரி 23-ம் தேதி முதல் மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி (டபிள்யூபிஎல்) நடைபெறவுள்ளது.
டபிள்யூபிஎல் போட்டிகள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இந்தத் தொடர் பெங்களூரு, டெல்லியில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
» ரூட் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்காக விளையாடும் தனது கனவுக்கு ஒளியூட்டிய நெட் பவுலர்
» ஷமி, கில், அஸ்வின் மற்றும் பலருக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கல்
பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
கடந்த சீசனைப் போல இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வதுஇடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஐபிஎல் தொடர் பிப்ரவரி 23-ம்தேதி முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும். மார்ச் 15-ம் தேதி எலிமினேட்டர்ஆட்டமும், மார்ச் 17-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறவுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago