‘பவானி தேவியின் சாதனைகளால் ஊக்கம் கிடைக்கிறது’: தமிழக வீரர் அன்பிலஸ் காட்வின்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒலிம்பியன் பவானி தேவியின் வெற்றிப் பயணத்தால் ஈர்க்கப்பட்டு அவரது பாதையை பின்பற்றி விளையாடி வருவதாக 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் அன்பிலஸ் காட்வின் தெரிவித்தார்.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான அன்பிலஸ்காட்வின் கூறிதாவது: நான்இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடவும், அதற்கான நீண்ட பயணத்தை மேற்கொள்ளவும் கேலோ இந்தியாஇளைஞர் போட்டி பெரிதும் உதவுகிறது. திறமையான வாள்வீச்சு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளுக்கு உயர்பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

முன்னணி வீராங்கனையான பவானிதேவியின் வெற்றிகள், இந்த விளையாட்டில் ஒரு பெரியதிருப்பத்தை ஏற்படுத்தியதால், பலர் இதில் ஈடுபட்டு பல்வேறு வெற்றிகளை குவித்துவருகிறார்கள். சீனியர் தேசிய வாள்வீச்சு போட்டியின் போதுதான் நான்பவானிதேவியின் ஆட்டத்தை பார்த்தேன். நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு அமோக பாராட்டுகள் கிடைத்து வருகிறது. முன்பெல்லாம் வாள்வீச்சு விளையாட்டுக்கென்று போதிய வசதிகள் இருந்தது இல்லை. தற்போது அந்த நிலை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளால் பெரிய அளவில் மாறிஉள்ளது. இதன் மூலம் வாள்வீச்சில் மேலும் பல வீரர்கள்பதக்கம் வெல்லும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அன்பிலஸ் காட்வின் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE