வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவண் சதம் அடித்தார். தனது 100-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த பெருமையைப் பெற்றார் ஷிகர் தவண்.
ஆட்டத்தின் 34-வது ஓவரை கிறிஸ் மோரிஸ் வீச தாழ்வான புல்டாஸாக வந்த முதல் பந்தை ஷிகர் தவண் நேராக டிரைவ் ஆடினார், மிட் ஆஃப் பீல்டரையும் கடந்து பவுண்டரிக்குச் செல்ல ஹெல்மெட்டைக் கழற்றினார் ஷிகர் தவண்.
99 பந்துகளில் சதம் எடுத்த ஷிகர் தவண் தற்போது 102 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 107 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார்.
இவருடன் ரஹானே 5 ரன்கள் எடுத்து ஆடிவர இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. 35வது ஓவர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முன்னதாக ரோஹித் சர்மா மீண்டும் சோபிக்க முடியவில்லை, ரபாடாவின் உள்ளே வந்த ஃபுல் லெந்த் பந்தை வலது கையை அழுத்தி ஆடியதால் ரபாடாவிடமே கேட்ச் ஆனது, அருமையான கேட்ச் ஆகும் அது.
கோலியும், தவணும் இணைந்து 27 ஓவர்களில் 158 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். விராட் கோலி வழக்கம் போல் அனாயசமான ஷாட்கள், விரைவு ஒன்று, இரண்டுகள் என்று 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்தில் கவரில் மில்லரிடம் கேட்ச் ஆனார். லுங்கி இங்கிடி வீசிய பந்தை இரண்டு அடி நடந்து வந்து நேராக அடித்த சிக்ஸ் மெஜஸ்டிக் ரகத்தைச் சேர்ந்ததோடு நமக்கு சச்சினின் ஆக்ரோஷத்தையும் ஸ்டைலையும் நினைவு படுத்துவதாக இருந்தது.
இன்று கோலி வேறு மூடில் இருந்தார், இடைவெளி கண்ட இடங்களிலெல்லாம் தூக்கித் தூக்கி அடித்தார். ஆனால் முன்னதாக கோலிக்கு ஒரு பந்தை மோர்கெல் ஏத்த கோலி அதனை ஆட பவுலர் மோர்கெலிடமே கேட்ச்சாக வந்தது, மோர்கெல் கடும் முயற்சி செய்தார் ஆனால் பந்தைப் பிடிக்க முடியவில்லை. தப்பினார் கோலி. இன்னொரு ஷாட்டை தூக்கி அடிக்கப் போய்த்தான் அவர் கவர் திசையில் கேட்ச் ஆனார்.
இந்நிலையில் 35-வது ஓவரில் மழை வர ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago