மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முன்னேற்றம் கண்டார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் சபலென்காவுடன், உக்ரைன் வீராங்கனை சுரேன்கோ மோதினார்.
இதில் சபலென்கா 6-0, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அனிசிமோவா7-5, 6-4 என்ற கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவை வீழ்த்தி முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், 6-3, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் எட்ச்சேவ்ரியைச் சாய்த்தார்.
» “பாகிஸ்தான் அணிக்கு வேதனை” - தொடக்க கூட்டணியை பிரித்தது குறித்து ரிஸ்வான் கருத்து
» “முர்ரேவின் ட்வீட்டை பிரின்ட் எடுத்து ஃப்ரேம் போட்டு வைப்பேன்” - 16 வயது டென்னிஸ் வீராங்கனை
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-0, 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் பேசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ரூபலேவ் 6-2, 7-6, 6-4 என்ற கணக்கில் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தினார்.
உக்ரைன் வீராங்கனை சுரேன்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா. படம்: ஏஎப்பி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago