தோல்வியின் பிடியில் மேற்கு இந்தியத் தீவுகள்

By செய்திப்பிரிவு

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது.

அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது முதல் இன்னிங்ஸில் 62.1 ஓவரில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கிர்க் மெக்கென்சி 50, ஷாமர் ஜோசப் 36 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 21 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 12, மார்னஷ் லபுஷேன் 10 ரன்களில் வெளியேறினர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 81.1 ஓவர்களில் 283 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. தனது 7-வது சதத்தை விளாசிய டிராவிஸ் ஹெட் 134 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்த நிலையில் ஷாமர் ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். உஸ்மான் காவாஜா 45, கேமரூன் 14, மிட்செல் மார்ஷ் 5, அலெக்ஸ் கேரி 15, மிட்செல் ஸ்டார்க் 10, பாட் கம்மின்ஸ் 12, நேதன் யலன் 24 ரன்களில் வெளியேறினர்.

மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஷாமர் ஜோசப் 5 விக்கெட்களையும், கேமர் ரோச், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 22.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.

கிரெய்க் பிராத் வெயிட் 1, தகேநரைன் சந்தர்பால் 0, கிர்க் மெக்கென்சி 26, அலிக் அத்தனாஸ் 0, கவேம் ஹாட்ஜ் 3, ஜஸ்டின் கிரீவ்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோஷுவா டி சில்வா 17 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்களை வீழ்த்தினார். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 22 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்