ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் | துனிசியாவின் ஜபூர் அதிர்ச்சி தோல்வி

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபூர் தோல்வி அடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில்நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 43-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினுடன் மோதினார். 3 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 4-6, 7-6(7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிங் ஷின்னர் 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-0, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஹியூகோ கட்சனையும், 10-ம்நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-0, 6-3 என்றசெட் கணக்கில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4,6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யூபாங்க்ஸையும், 7-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 4-6, 7-6 (8-6), 6-2, 7-6 (7-4)என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்சனையும் வீழ்த்தினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம்நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ்ஜபூர் 0-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் மிரா ஆன்ட்ரீவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பெலாரசின் அரினா சபலெங்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் பிரெண்டா ஃப்ருஹ்விர் டோவாவையும் அமெரிக்காவின் கோ கோ காஃப் 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் சகநாட்டைச்சேர்ந்த கரோலின் டோல்ஹைடையும்,10-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் அலினா கோர்னீவாவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால்பதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்