கேலோ இந்தியா | கபடி போட்டிகள் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் போட்டி சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் வரும் நாளை (19-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கபடி போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

மகளிர் கபடியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஹரியாணாவுடன் மோதுகிறது.

ஆடவருக்கான கபடியில் தமிழ்நாடு அணி ‘பி‘ பிரிவில் உள்ளது. தமிழ்நாடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று ஹரியாணாவுடன் மோதுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE