பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்

By செய்திப்பிரிவு

டூனிடின்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய 3 ஆட்டங்களில் இருந்து காயம் காரணமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3-வது ஆட்டம் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டூனிடின் நகரில் நடைபெறுகிறது.

இதற்கிடையே இந்த தொடரின் எஞ்சிய 3 ஆட்டங்களில் இருந்தும் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார். 2வது டி 20 ஆட்டத்தின் போது அவருக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. பிப்ரவரி 3ம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக உடற்தகுதி அடையும் விதமாக தற்போது டி20 தொடரில் இருந்து வில்லியம்சன் விலகி உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்