IND vs AFG இரண்டாவது டி20 | டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு

By செய்திப்பிரிவு

இந்தூர்: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் தொடங்க உள்ள நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டம் இந்தூரில் இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. “பந்துவீச்சு தேர்வு செய்ததற்கு குறிப்பிட்ட காரணம் என்று எதுவுமில்லை. மைதானம் சிறிய பவுண்டரிகளை கொண்டுள்ளது. ஷூப்மன் கில் மற்றும் திலக் வர்மாவுக்கு பதிலாக விராட் கோலியும், ஜெய்ஸ்வாலும் அணிக்கு திரும்பியுள்ளனர்” என கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ப்ளேயிங் லெவன்: ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான் அணி ப்ளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், குல்பாடின் நைப், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி டி 20 தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE