தமிழ்நாடு வாலிபால் லீக்: சென்னை அணி சாம்பியன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில் முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டிகள் சென்னை மைலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ்-கடலூர் வித் அஸ் அணிகள் மோதின.

இதில் சென்னை ராக்ஸ்டார்ஸ் 21-17, 21-16, 21-19 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன்பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம்வென்ற அந்த அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடம் பிடித்த கடலூர் அணிக்கு ரூ.3 லட்சமும், 3-வது இடம் பெற்ற விருதுநகர் கிங் மேக்கர்ஸ் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார். விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன், தயாநிதி மாறன் எம்.பி., தமிழ்நாடு கைப்பந்துசங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, தலைமை புரவலர் எஸ்.என்.ஜெயமுருகன், பொருளாளர் எம்.பி.செல்வகணேஷ், போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் ஆர்.கே.துரைசிங், ஏ.பழனியப்பன், எஸ்.தட்சிணாமூர்த்தி, பி.கலைசெல்வன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்