அல்டிமேட் கோ கோ இறுதிப் போட்டி: சென்னை - குஜராத் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

கட்டாக்: அல்டிமேட் கோ கோ சீசன் 2 இறுதிப் போட்டியில் சென்னை குயிக் கன்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. அதேவேளையில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஒடிசா ஜாகர்நட்ஸ் - தெலுகு யோதாஸ் அணிகள் மோதுகின்றன.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வந்த அல்டிமேட் கோ கோ சீசன் 2 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் கடந்த 16 நாட் களாக 32 ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடை பெறுகிறது. இதில் சென்னை குயிக் கன்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்து கின்றன. சென்னை குயிக் கன்ஸ் இந்த சீசன் முழுவதும சிறந்த அணியாக வலம் வருகிறது.

சென்னை குயிக் கன்ஸ் இந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. அதேவேளையில் இரு முறை குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி உள்ளதால் மிகுந்த நம்பிக் கையுடன் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது சென்னை குயிக் கன்ஸ் அணி.

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது அரை இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான ஒடிசா ஜாகர்நட்ஸ் அணியை வீழ்த்திய நம்பிக்கை யுடன் களமிறங்குகிறது. முன்ன தாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஒடிசா ஜாகர்நட்ஸ் - தெலுகு யோதாஸ் அணிகள் மோதுகின் றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE