ஹாலிவுட் பாணியில் ஹெலிகாப்டரில் பிரம்மாண்ட என்ட்ரி - வைரலாகும் வார்னரின் வீடியோ

By செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஹாலிவுட் சினிமா பாணியில் மைதானத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

தற்போதைய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி போட்டியே டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னருக்கும் கடைசி போட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்டார். கடைசி இன்னிங்ஸில் அபார அரைசதம் விளாசி வெற்றியுடன் விடைபெற்றுள்ளார். ஏற்கெனவே ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துள்ளதால் கிட்டத்தட்ட சர்வதேச கிரிக்கெட்டில் டேவிட் வார்னரின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.

எனினும் சர்வதேச டி20, பிரீமியர் லீக் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் வார்னர். அந்த வகையில் ஆஸ்திரேலிய பிரீமியர் லீக் தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறார் வார்னர். இதில் சிட்னி தண்டர் அணிக்காக இரண்டாம் ஆண்டு களமிறங்க உள்ள அவர், அதற்காக சிட்னி மைதானத்துக்கு ஹாலிவுட் சினிமா பாணியில் ஹெலிகாப்டரில் பிரமாண்ட என்ட்ரி கொடுத்தார்.

சிட்னி தண்டர் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் இடையே இன்று போட்டி நடைபெற்றது. தனது சகோதரரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற வார்னர், போட்டிக்கு முன்னதாக மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதற்கிடையே, பிக் பாஷ் லீக் போலவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஐஎல்டி20 போட்டிகளிலும் வார்னர் பங்கேற்கவுள்ளார். ஐபிஎல் தொடரிலும் விளையாட இருக்கும் அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி சார்பில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்