பெர்த்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓபனராக களமிறங்க உள்ளார்.
இதுவரை மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவர் டேவிட் வார்னர் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது முதல் நிலை வீரராக களமிறங்க உள்ளார். இதனை ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார். மேலும், "ஓபனராக இறங்குவதில் உற்சாகத்துடன் இருப்பதை ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படையாக அறிவித்தார். அவ்வாறு முன் வந்து தனக்கு இது வேண்டும் என்று ஸ்டீவ் கூறியது புத்துணர்ச்சி நிறைந்ததாக இருந்தது" என்று தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்தார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய தொடக்க இடது கை வீரர் டேவிட் வார்னர் தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்கு 3 வடிவ போட்டிகளிலும் நல்ல ஓபனிங் வீரராக திகழ்ந்த வார்னர் ஓய்வுபெற்றதால் அவர் இடத்தை நிரப்ப போவது யார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
அப்போது ஸ்டீவ் ஸ்மித் தானாக முன்வந்து, "தொடக்க வீரராக இறங்கி வார்னரின் இடத்தை நிரப்பத் தயார். உண்மையில் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியாக உள்ளேன். நான் தொடக்க வீரராக இறங்குவதில் முனைப்பாக இருக்கிறேன். நிச்சயம் தேர்வுக்குழுவினர் என்னிடம் இது பற்றி பேசுவார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
» “தோனிக்கு ஈடு இணை யாரும் இல்லை” - கேப்டன்சியை புகழ்ந்த பிரவீன் குமார்
» பண்ணையில் இருந்து ரஞ்சி கிரிக்கெட் வரை உயர்ந்த கவுரவ் யாதவ்!
ஆஸ்திரேலிய அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago