ஜெர்மனி கால்பந்தாட்ட ஜாம்பவான் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார்!

By செய்திப்பிரிவு

சால்ஸ்பர்க்: ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார். அவருக்கு வயது 78. இவர் தலைமையிலான ஜெர்மனி அணி கடந்த 1974-ல் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. யூரோ கோப்பை மற்றும் Ballon d'Or விருதையும் இவர் வென்றுள்ளார்.

கடந்த 1990-ல் உலகக் கோப்பை வென்ற ஜெர்மனி அணியின் பயிற்சியாளரும் இவர்தான். அவரது மறைவுக்கு இந்நாள் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் ஆஸ்திரியாவில் உள்ள சால்ஸ்பர்க் நகரில் உயிரிழந்தார்.

மேற்கு ஜெர்மனி அணிக்காக 103 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். 1965 முதல் 1977 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடி இருந்தார். மூன்று முறை உலகக் கோப்பை தொடரிலும், இரண்டு முறை யூரோ கோப்பை தொடரிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். கிளப் அளவில் பேயர்ன் முனிச் அணிக்காக அதிகம் விளையாடி உள்ளார். மிட்ஃபீல்டராக விளையாட தொடங்கி அபார தடுப்பாட்ட வீரராக உருவானவர். மறைந்த பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு எதிராக களத்தில் விளையாடி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE