டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு: வார்னருக்கு சச்சின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து வார்னருக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வார்னருக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு அதிரடியான டி20 கிரிக்கெட் வீரராக இருந்து ஒரு நெகிழ்ச்சியான டெஸ்ட் வீரராக நீங்கள் மாறினீர்கள் டேவிட் வார்னர். கிரிக்கெட்டில் உங்களது வேகம், மாற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இன்னிங்ஸை வேகப்படுத்துவதில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துபவராக இருந்தீர்கள். உங்களது அற்புதமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள், டேவிட். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு சச்சின் அதில் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE