மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அணியில் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார். ரோகித் மற்றும் கோலி என இருவரும் கடைசியாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் விளையாடி இருந்தனர். அதன் பிறகு இப்போதுதான் சர்வதேச டி20 போட்டியில் விளையாட உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். வரும் ஜூன் 1-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரோகித்தும், கோலியும் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டி20 தொடர் வரும் 11, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மொகாலி, இந்தூர் மற்றும் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த அணியில் சிராஜ் மற்றும் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
» சென்னை, புறநகரில் காலை முதல் இடைவிடாமல் மழை: ஜனவரி மழைக்குக் காரணம் என்ன?
» பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்: ஜாக்டோ - ஜியோ தீர்மானம்
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷூப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago