AUS vs PAK டெஸ்ட் போட்டி | 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

சிட்னி: பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 6 ரன்களுடனும், உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காத நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினர். டேவிட் வார்னர் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆகா சல்மான் சுழலில் வெளியேறினார்.

உஸ்மான் கவாஜா 47 ரன்கள் எடுத்த நிலையில் அமீர் ஜமால் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது மார்னஷ் லபுஷேன் 23, ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE