AUS vs PAK 3-வது டெஸ்ட் | பாகிஸ்தான் அணி 313 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

சிட்னி: சிட்னி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிட்னியில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபிக், சைம் அயூப் டக் அவுட்டில் வெளியேறினர். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய பாபர் அஸம் 26, சவுத் ஷகீல் 5, ஷான் மசூத் 35 ரன்களில் ஆட்டமிழந்தனர். 96 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் முகமது ரிஸ்வான், ஆகா சல்மான் ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிஸ்வான் 103 பந்துகளில், 88 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சஜித் கான் 15, ஹசன் அலி 0 ரன்களில் வெளியேறினர்.

ஆகா சல்மான் 53 ரன்களில்மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். 227 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில் அதிரடியாக விளையாடிய அமீர்ஜமால் 97 பந்துகளில், 9 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசிய நிலையில் நேதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்களில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டுக்கு அமீர் ஜமால், மிர் ஹம்சா ஜோடி 23 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்தது.

பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 6 ரன்களுடனும், உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE