சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச்சுக்கு அடுத்த அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் தோல்வி கண்டார்.

கடந்த வாரம் ரோஜர் கோப்பை போட்டியின் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட ஜோகோவிச், இப்போது சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் அடுத்த அதிர்ச்சி தோல்வியை சந்தித்திருக்கிறார். ஜோகோவிச் 6-7 (6), 5-7 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் டாமி ராபர்ட்டோவிடம் வீழ்ந்தார்.

வரும் 25-ம் தேதி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஜோகோவிச் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்திருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி குறித்துப் பேசிய ஜோகோவிச், “இப்போது தோல்வி கண்டிருப்பது மோசமானதாகும். கடந்த 2 வாரங்களாக “ஹார்ட் கோர்ட்” போட்டிகளில் நிறைய

விஷயங்கள் எனக்கு சாதகமாக அமையாதது துரதிருஷ்டவசமானது. வழக்கமாக நான் எப்படிஆடுவேனோ அதில் பாதியளவுக்குக்கூட ஆடவில்லை. அமெரிக்க ஓபன் போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராக முயற்சிப்பேன்” என்றார்.ஜோகோவிச்சுடன் இதுவரை 8 முறை மோதியுள்ள ராபர்ட்டோ, 2-வது முறையாக அவரை வீழ்த்தியுள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு ஓபன் போட்டியில் அப்போதைய முதல் நிலை வீரரான லெய்டன் ஹெவிட்டை தோற்கடித்த ராபர்ட்டோ, இப்போது

மற்றொரு முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளார்.வெற்றி குறித்துப் பேசியராபர்ட்டோ, “இங்கு விளையாடுவது எப்போதுமே அற்புதமானது. இப்போது ஜோகோவிச்சை வீழ்த்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிறப்பாக ஆடியிருக்கிறேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே ஜோகோவிச் போன்றவர்களுக்கு எதிராக வெற்றி பெற முடியும்” என்றார்.ராபர்ட்டோ தனது காலிறுதியில் சகநாட்டவரான டேவிட் ஃபெரரை சந்திக்கவுள்ளார். ஃபெரர் 7-5, 6-0 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் மிக்கேல் யூஸ்னியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் ஃபெடரர்

மற்றொரு 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் மான்பில்ஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஃபெடரர் அடுத்த சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை சந்திக்கிறார். முர்ரே தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-7 (3), 6-4, 7-6 (2) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா தனது 3-வது சுற்றில் 3-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். காலிறுதியில் பிரான்ஸின் ஜூலியன் பென்னட்டாவை சந்திக்கிறார் வாவ்ரிங்கா. ஜூலியன் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் போலந்தின் ஜெர்ஸி ஜானோவிச்சை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் கனடாவின் மிலஸ் ரயோனிச்சும், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியும் சந்திக்கின்றனர்.

செரீனா வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிளேவியா பென்னட்டாவை வீழ்த்திய செரீனா, அடுத்ததாக செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச்சை சந்திக்கவுள்ளார். மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும், ருமேனியாவின் சைமோனா ஹேலப்பும் சந்திக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்