சிட்னி: சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் அசைக்க முடியாத பந்துவீச்சை வீசி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் முதல் நாள் ஹீரோ என்றால் அது ஆல்ரவுண்டராக வளர்ச்சி அடையும் அமீர் ஜமால் என்றால் மிகையாகாது. இவர் 9-வது டவுனில் இறங்கி 227/9 என்ற நிலையிலிருந்து 11-வது வீரர் மிர் ஹம்சா (7 நாட் அவுட்) உடன் இணைந்து 86 ரன்களை கடைசி விக்கெட்டுக்காகச் சேர்த்தார். 1976-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் ஆசிப் இக்பால், இக்பால் காசிம் இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 87 ரன்களைச் சேர்த்ததற்குப் பிறகு பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இன்று அமீர் ஜமால் - மிர் ஹம்சா கூட்டணி கடைசி விக்கெட்டுக்காக 86 ரன்களைச் சேர்த்து சாதனை புரிந்தனர்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், அணி வீரர்கள் அவரது முடிவுக்குச் சாதகமாக செயல்படவில்லை. பிட்சில் ஆரம்பகட்ட ஈரப்பதம் இருந்தது. கொஞ்சம் புற்களும் விடப்பட்டிருந்தன. ஆனால், பாகிஸ்தான் அதிர்ச்சித் தொடக்கம் கண்டது. அப்துல்லா ஷபிக், அறிமுக வீரர் சயீம் அயூப் ஆகியோர் டக் அவுட் ஆயினர். ஸ்டார்க் வீசிய வெளியே சென்ற பந்தை விரட்டி எட்ஜ் ஆகி ஸ்மித்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார் அப்துல்லா ஷபீக். அதேபோல், ஹாசில்வுட்டின் அற்புதமான அவுட் ஸ்விங்கரை சயீம் அயூப் எட்ஜ் செய்ய அதனை அலெக்ஸ் கேரி கேட்ச் ஆக்க பாகிஸ்தான் 4/2 என்று பயம் காட்டியது.
ஷான் மசூத் (35) பாபர் அசாம் (28) இணைந்து ஸ்கோரை 39 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது கம்மின்ஸ் வீசிய பெரிய இன்ஸ்விங்கருக்கு பேட்டைத் தாமதமாக இறக்கியதால் எல்பி ஆனார். சவுத் ஷகீலும் கம்மின்ஸ் பந்தை எட்ஜ் செய்ய பாகிஸ்தான் 47/4 என்று ஆனது. கேப்டன் ஷான் மசூத் மிட்செல் மார்ஷின் பந்தை ஒருமுறை எட்ஜ் செய்து கேட்ச் ஆன போது நோ-பால் ஆகித் தப்பித்தார். ஆனால், தவறைத் திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மிட்செல் மார்ஷ் பந்தை அதே போல் ஆடி எட்ஜ் ஆகி வெளியேற பாகிஸ்தான் 96/5 என்ற நிலைக்கு சென்றது.
» தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வான நரிப்பள்ளி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
» IND-W vs AUS-W | 3-0 என தொடரை வென்றது ஆஸி. மகளிர் அணி; 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!
முகமது ரிஸ்வான் இறங்கியதும் ஸ்கொயர் லெக் மேல் ஒரு அபாரமான சிக்சரை தூக்கி ஆரம்பித்தவர், அட்டகாசமாக ஆடினார். நிச்சயம் சதமெடுப்பார் என்று பார்த்த நிலையில் 103 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 88 ரன்களை எடுத்து கம்மின்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட்டாக விளையாட, அது டாப் எட்ஜ் எடுத்து டீப்பில் கேட்ச் ஆக சதம் எடுக்காமல் வெளியேறினார்.
ஆனால் ரிஸ்வான் - ஆகா சல்மான் ஜோடி 94 ரன்களை 6வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆகா சல்மான் 67 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து அற்புதமாக ஆடினார். இவர் அதுவரை ஷார்ட் பிட்ச் பந்துகளை நன்றாக ஆடிய நிலையில், ஸ்டார்க்கின் ஷார்ட் பால் ஒன்றை அடிக்க நினைத்து ட்ராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். சஜித் கான் 15 ரன்களில் கம்மின்ஸிடம் வீழ்ந்தார். ஹசன் அலியும் கம்மின்ஸின் 5வது விக்கெட்டாக டக் அவுட்டாக பாகிஸ்தான் 227/9 என்றானது. இருப்பினும் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அமீர் ஜமால் வெளுத்து வாங்கிவிட்டார். கபில்தேவ் போல் ஒரு இன்னிங்ஸை ஆடினார் அவர்.
எதிர்முனை வீரர் மிர் ஹம்சாவை வைத்துக் கொண்டு அவரிடம் ஓரிரு பந்துகளை மட்டுமே ஓவரில் ஸ்ட்ரைக்காக கொடுத்து மீதமுள்ள பந்துகளில் இவர் ஸ்கோர் செய்யத் தொடங்கினார். அதுவும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளை பவுண்டரிக்குப் பறக்க விட்டார், இருமுறை சிக்சர்களுக்கும் பறக்க விட்டார். நேதன் லயன் ஓவரிலும் இரண்டு சிக்சர்கள் விளாசினார். அதில் ஒன்று ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ். இன்னொன்று லாங் ஆன் மேல் வெறித்தனமான சிக்ஸ். 112 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசித்தள்ளினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் ஆடிய, அதுவும் 9-ம் எண் வீரர் ஆடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆக இது அமைந்தது. இதன்பின் கடைசி விக்கெட்டாக ஜமால் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 313 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 6/0. தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் வார்னர் 6 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago