4 நாடுகள் ஹாக்கி தொடரில் இந்திய அணி பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 4 நாடுகள் ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி கலந்து கொள்கிறது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய ஆடவர் ஹாக்கி அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக தென் ஆப்பிரிக்காவில் வரும் 14-ம் தேதி நடைபெறும் 4 நாடுகள் ஹாக்கி தொடரில் கலந்து கொள்கிறது இந்திய அணி. வரும் 28-ம் தேதிவரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய 4 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடருக்காக 39 பேரைஉள்ளடக்கிய இந்திய ஆடவர் அணி பெங்களூருவில் நடைபெற்று வரும் தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின் முடிவில் இந்திய அணி, 4 நாடுகள் ஹாக்கி தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறது. இந்த தொடர் முடிவடைந்தும் பிப்ரவரியில் நடைபெறும் புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE