சிட்னி: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான விளையாடும் லெவனில் இருந்து தொடக்க பேட்ஸ்மேன் இமாம் உல் ஹக், வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்பர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.
இந்நிலையில் இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. தொடரை ஏற்கெனவே கைப்பற்றி விட்ட நிலையில் இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி உள்ளது. அந்த அணி எந்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரரான டேவிட் வார்னர், இந்த போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால், அவரிடம் இருந்து சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி பேட்டிங் செய்து வருகிறது.
பாகிஸ்தான் அணி தொடரை இழந்துவிட்ட நிலையில் ஆறுதல் வெற்றி பெற முயற்சி செய்யக்கூடும். மெல்பர்ன் போட்டியில் பாகிஸ்தான் அணி சற்று சவால் கொடுத்தது. இதனால் அந்த அணி மீது எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையே இந்த போட்டிக்கான விளையாடும் லெவனை பாகிஸ்தான் அணி நிர்வாகம் நேற்றே அறிவித்தது. இதில் தொடக்க பேட்ஸ்மேன் இமாம் உல் ஹக், வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக 21 வயதானசைம் அயூப், 30 வயதான சஜித் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
» அதானி vs ஹிண்டன்பர்க் விவகாரம்: உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு!
» IND-W vs AUS-W | 3-0 என தொடரை வென்றது ஆஸி. மகளிர் அணி; 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!
தொடக்க வீரரான சைம் அயூபுக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர், சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி இருந்தார். 8 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 123 ரன்கள் சேர்த்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் கராச்சி அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளதால் தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார் சைம் அயூப்.
சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சஜித் கான், இரு வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக அவர், கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சஜித் கான் 22 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார்.
பாகிஸ்தான்: ஷான் மசூத் (கேப்டன்), சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் அஸம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், சஜித் கான், ஹசன் அலி, மிர் ஹம்சா, அமீர் ஜமால்.
ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்) டேவிட் வார்னர்,உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், நேதன் லயன், ஜோஸ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
29 mins ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago