வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. வெற்றி: 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது தொடர்

By செய்திப்பிரிவு

மவுண்ட் மாங்கனுயி: வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

வங்கதேச கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகள்கொண்ட டி20 தொடரில் வங்கதேச அணி 1-0என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 போட்டி மவுண்ட்மாங்கனுயில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சவும்யா சர்க்கார்4, ரானி தாலுட்கர் 10, கேப்டன் ஷன்டோ17, தவ்ஹித் ஹிரிடோய் 16, அஃபிப் ஹொசைன் 14, ஷமிம் ஹொசைன் 9, மெஹதி ஹசன் 4, ரிஷத் ஹொசைன் 10,ஷோரிபுல் இஸ்லாம் 4, தன்வீர் இஸ்லாம் 8, முஸ்டாபிசுர் 3 ரன்கள் சேர்த்தனர்.

நியூஸிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டும், டிம் சவுத்தி, மில்ன், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றிஎன்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து14.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி நியூஸிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நியூஸிலாந்து தரப்பில் ஃபின் ஆலன் 38, டிம் செய்பர்ட் 1, டேரில் மிட்செல் 1, கிளென் பிலிப்ஸ் 1, மார்க் சாப்மேன் 1 ரன்கள் எடுத்தனர். ஆனால் ஜேம்ஸ் நீஷம், கேப்டன் சான்ட்னர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். நீஷம் 28 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்டசர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என சமனிலையில் முடிந்துள்ளது. நியூஸிலாந்தின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ஆட்ட நாயகன் விருதும், வங்கதேசத்தின் ஷோரிபுல் இஸ்லாம் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டு: வெற்றிக்குப் பின்னர் நியூஸிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியதாவது: இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது அருமையான விஷயம். வேகப்பந்து வீச்சாளர்கள்தங்களது பணியை சிறப்பாக செய்து முடித்தனர். மொத்தத்தில் பாராட்டுக்கள் அனைத்தும் பந்துவீச்சாளர்களுக்கே. இந்தத்தொடர் எங்களுக்குக் கடினமானதாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்