பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் : நடால் - லோபஸ் ஜோடி தோல்வி

By செய்திப்பிரிவு

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றிலேயே ஸ்பெயினின் ரபேல் நடால்-மார்க் லோபஸ் ஜோடி தோல்வி கண்டது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் காயம் காரணமாக கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக எந்த டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார்.

நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால், மார்க் லோபஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோர்டன் தாம்சன், மேக்ஸ் பர்செல் ஜோடியுடன் மோதியது.

இதில் ஜோர்டன் தாம்சன், மேக்ஸ் பர்செல் ஜோடி சிறப்பாக விளையாடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் நடால், லோபஸ் ஜோடியை வீழ்த்தியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு டென்னிஸ் போட்டிகளுக்குத் திரும்பியிருக்கும் நடால், முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆடவர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றவர் நடால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் செர்பியாவீரர் ஜோகோவிச் 24 பட்டங்களை வென்று முதலிடத்தில் இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE