‘இந்திய அணி நல்ல அணி, நிறைய திறமைகள் உள்ளன. ஆயிரம் திறமைகள் இருந்தும் ஆயிரம் வகைகள் இருந்தும்’ இந்திய அணி வெற்றி பெறும் என்று நான் கருதவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் சாடியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு எந்த ஒரு தயாரிப்பும் இல்லாமல் டி20, ஒருநாள் போட்டிக்கான அணியைக் கொண்டு சென்று திறமையான டெஸ்ட் வீரர்கள் ரஞ்சி அணியில் இருந்தும் தேவையில்லாமல் ஷுப்மன் கில், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரை தேர்வு செய்து செம சாத்து வாங்கி செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. ராகுல், கோலியைத் தவிர மற்ற பேட்டர்கள் சொதப்பினர். பவுலிங்கில் பும்ரா உட்பட அனைவரும் லெந்த்தை தேடினர். மாறாக தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் இதே பிட்சில் பந்துகளை ஸ்விங் செய்து இந்திய வீரர்களை நசுக்கினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் வர்ணனையில் இருந்த மைக்கேல் வான், மார்க் வாஹ் இந்திய அணி குறித்து விவாதித்தனர். அப்போது இந்திய அணி திறமைகள் இருந்தும் திறமைகளுக்குக் குறைவாக, மோசமாக டெஸ்ட் போட்டிகளை ஆடும் அணியாக இருக்கிறது என்றார் மைக்கேல் வான்.
மேலும் அவர் பேசுகையில், “சமீப காலங்களில் அவர்கள் அதிகம் வெற்றிகளைப் பெறவில்லை. திறமைக்குக் குறைவாக ஆடும் அணியாக உள்ளனர். அவர்கள் எதையும் வெற்றி பெறுவதில்லை. எப்போது இந்திய அணி வென்றது?. இத்தனை திறமைகள், வள ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு அவர்கள் நிறைய வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடரை வென்றனர். அது அபாரம், அற்புதம். கடந்த சில உலகக் கோப்பைகளில் அவர்கள் எங்கும் வெல்லவில்லை. கடந்த சில டி20 உலகக் கோப்பைகளிலும் அவர்கள் எங்குமே இல்லை. இந்திய அணியிடம் என்ன இல்லை, திறமைக்குக் குறைவா, அல்லது வள ஆதாரங்களுக்குத்தான் குறைவா?. இத்தனை இருந்தும் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.” என்றார்.
» SA vs IND | “ஒரு பவுலரை மட்டும் சார்ந்திருக்க முடியாது” - டெஸ்ட் தோல்வி குறித்து ரோகித் சர்மா
தென் ஆப்பிரிக்காவில் அடைந்த தோல்வி இந்திய அணி மீது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. 3 நாட்களுக்குள் கதை முடிந்தது என்றால் என்ன டெஸ்ட் அணி இது? என்ற கேள்வியே நம்மைத் துளைக்கிறது. மைக்கேல் வான் விமர்சனத்தை ட்ரோல் செய்யக்கூடாது, அவர் கேட்கும் கேள்விகள் சரியானவை. உண்மையில் ஏன் இந்திய அணி இப்படி ஆடுகிறது? இவர்களுக்கு எதில் குறைவு? என்ற கேள்வி பிசிசிஐ கேட்க வேண்டிய கேள்வியாகும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago