தேசிய சீனியர் தடகளம் தமிழக அணி அறிவிப்பு

18-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகளப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வரும் 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கவுள்ள தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வீரர்கள், 24 வீராங்கனைகள் என மொத்தம் 54 பேர் தமிழக அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டி ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆகும்.

ஆடவர் அணி விவரம்: விஜயகுமார் (100 மீ. ஓட்டம், 4*100 மீ. ஓட்டம்), வேலாயுதம், மணிகண்ட ஆறுமுகம் (100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 மீ. ஓட்டம்), அரவிந்தன் (200 மீ. ஓட்டம், 4*100 மீ. ஓட்டம்), தீபன் சக்ரவர்த்தி, ஆரோக்கிய ராஜீவ் (400 மீ. ஓட்டம், 4*400 மீ. ஓட்டம்), ஜீவன் குமார் (800 மீ. ஓட்டம், 4*400 மீ. ஓட்டம்), அனீஷ் (1,500 மீ. ஓட்டம், 5,000 மீ. ஓட்டம், 4*400 மீ. ஓட்டம்), லட்சுமணன் (5,000, 10,000 மீ. ஓட்டங்கள்), எழில் நிலவன் (10,000 மீ. ஓட்டம்), சுரேந்தர் (110 மீ. தடை தாண்டுதல் ஓட்டம்,

மும்முறைத் தாண்டுதல், 4*100 மீ. ஓட்டம்), சுதர்சன், தியாகராஜன் (110 மீ. தடை தாண்டுதல் ஓட்டம்), பாலமுருகன் (400 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 4*400 மீ. ஓட்டம்), ராமச்சந்திரன் (3000 மீ. ஸ்டீபிள்சேஸ்), பிரேம்குமார், விக்னேஷ்வர், சிலம்பரசன் (நீளம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஸ்வரி, அருணாசலம் (மும்முறைத் தாண்டுதல்), நிகில் சிற்றரசு, யோகராஜ் (உயரம் தாண்டுதல்), சங்கர் (சங்கிலிக் குண்டு எறிதல்), பிரீத், வடிவேலு (கம்பு ஊன்றித் தாண்டுதல்), தங்கராசு, தேசிங் (டெக்கத்லான்), நாகேந்திரன், சரவணகுமார், கணபதி (20 கி.மீ. நடைப் போட்டி).

மகளிர் அணி: சாரதா நாராயணன் (100 மீ. ஓட்டம், 4*100 மீ. ஓட்டம்), அர்ச்சனா (100 மீ., 200 மீ. ஓட்டங்கள், 4*100 மீ. ஓட்டம்), காயத்ரி (200 மீ. ஓட்டம், 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 4*100 மீ. ஓட்டம்), கவிதா (400 மீ. ஓட்டம், 4*400 மீ. ஓட்டம்), கோமதி (800 மீ. ஓட்டம், 4*400 மீ. ஓட்டம்), மோகனாள் (800 மீ. ஓட்டம், 4*400 மீ. ஓட்டம்), சூர்யா (5,000 மீ. ஓட்டம், 10,000 மீ. ஓட்டம், 4*400 மீ. ஓட்டம்),

வசந்தாமணி (5000 மீ. ஓட்டம்), ஹேமா ஸ்ரீ, தீபிகா (100 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 4*100 மீ. ஓட்டம்), கார்த்திகா (நீளம் தாண்டுதல்), சிவ அன்பரசி (நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல்), சந்தியா (உயரம் தாண்டுதல்), லாவண்யா (உயரம் தாண்டுதல், ஹெப்டத்லான்), ரோஷெல் மரியா (மும்முறைத் தாண்டுதல்), சரஸ்வதி (ஈட்டி எறிதல், குண்டு எறிதல்), வசுமதி (குண்டு எறிதல், வட்டு எறிதல்), மகாலட்சுமி (வட்டு எறிதல்), கார்த்திகா, முத்துசெல்வி (சங்கிலி குண்டு எறிதல்), சுரேகா (கம்பு ஊன்றித் தாண்டுதல்), பத்மாவதி (3000 மீ. ஸ்டீபிள்சேஸ்), நீலவேணி, அதீனா (ஹெப்டத்லான்).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்