இந்தோனேஷியாவில் நடந்து வரும் இந்தோனேஷியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தகுதி பெற்றுள்ளார்.
ஜகார்த்தா நகரில் இந்தோனேஷியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடந்தது.
இதில் இந்திய வீராங்கனை சாய்னா நெவாலை எதிர்கொண்டார் முன்னாள் உலக சாம்பியனும் தாய்லாந்து வீராங்கனையுமான ரட்சனாக் இன்டோடனன்.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ரட்சனாக்கை 21-19, 21-19 என்ற நேர் செட்களில் போராடி வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் சாய்னா நேவால்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்து சாய்னாவுக்கு கடும் நெருக்கடி தரும் விதத்தில் ரட்சனாக் விளையாடி வந்தார். ஆனால், தனது அனுபவமான ஆட்டத்தின் மூலம் ரட்சனாக்கை பின்னக்கு தள்ளி 13-8 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்று அந்த செட்டைக் கைப்பற்றினார் சாய்னா.
இதேபோல 2-வது செட்டிலும் சாய்னாவுக்கு சவாலாகவே ரட்சனாக்கின் ஆட்டம் இருந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் 17-17 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் இருந்தனர். ஆனால், சாய்னாவின் வலுவான பின்கை ஆட்டத்தினால், அடுத்தடுத்து 2 புள்ளிகளைப் பெற்று அவர் 2-வது செட்டை தனதாக்கினார்.
இந்தோனேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் 6-வது முறையாக சாய்னா பைனலுக்கு முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago